சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வானிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் 2,3ம் தேதியில் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இந்தநிலையில் வருகிற 5ம் தேதி வாக்கில் அந்தமான் கடல்பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் ஊத்து-9 செ.மீ, ஸ்ரீவில்லி புத்தூர்-7செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.