நாடு முழுவதும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சிப்பெற்ற மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் ஆயுஷ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு சேர அடிப்படையான தேசிய தகுதி நுழைவுத் தோ்வு (நீட்) முடிவுகள் இன்று வெளியானது. தேசிய தோ்வு முகமை வெளியிட்டுள்ள இந்த தேர்வு முடிவுகளை அதன், அதிகாரப்பூர்வ இணையதளமான https://neet.nta.nic.in/-ல் மாணவர்கள் தெரிந்துக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீட் தோ்வு முடிவுகள் வெளியான நிலையில் தமிழகத்தில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு வரும் 10ஆம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.