டைமண்ட் லீக் தடகள போட்டிகள் சுவிட்சர்லாந்தின் சுரிச் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியாவை சேர்ந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். அவர், இறுதிச்சுற்றில் 88.44 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்தார். அதிக தூரத்திற்கு ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் நீரஜ் சோப்ரா, டைமண்ட் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.