நானும் ரவுடிதான் திரைப்படத்தின் கதாநாயகியாகவும் அதே திரைப்படத்தின் இயக்குநராகவும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும். காதம்பரி கதாப்பாத்திரம் மூலம் ஒன்றிணையத் தொடங்கினர். பின்னர், தொழில் ரீதியான நட்பு, நம்பிக்கைக்குரிய நண்பர்களாக இருவரையும் மாற்றியுள்ளது. இந்த நம்பிக்கையை அடுத்த தளத்துக்கு எடுத்து செல்லும் நோக்கில் ஒருவரை ஒருவர் காதலித்து தற்போது திருமணமும் செய்துகொண்டனர். இருவரும் பழகத் தொடங்கி காதலித்த காலம் முதல் திருமண பத்திரிக்கையை சாமியிடம் பூஜித்தது வரை திருப்பதி ஏழுமலையான் மீது மிகுந்த நம்பிக்கைக்கொண்ட நயன்-விக்னேஷ் இணை திருமணமான அடுத்த நாளான இன்று திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். ஏற்கனவே நேற்று முழுவதும் இணையத்தை ஆட்கொண்ட நயன்-விக்னேஷ் புகைப்படங்கள் இன்றும் இணையத்தில் டிரண்டாகி வருகிறது.