தேசிய பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா, 2013-2016 வரையிலான தனது பதவி காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுத்தொடர்பாக, செபி மேற்கொண்ட விசாரணையில் அவர் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானது. இதைத்தொடர்ந்து, பங்கு சந்தை முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆனந்த் சுப்பிரமணியன் மற்றும் சித்ரா ராமகிருஷ்ணா கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்தனர். ஏற்கனவே சித்ரா ராமகிருஷ்ணன், ஆனந்த் சுப்ரமணியன் இருவரின் ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டிருந்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 28ஆம் தேதி) ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.