இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவு தேர்வை கட்டாயமாக்கி, இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய பல்மருத்துவ கவுன்சில் சட்டங்களில் 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் திருத்தம் செய்யப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிராக 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த மாதம் 27ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சுதான்ஷூ துலியா, இந்த மனு வழக்கு விசாரணைக்கு உகந்தது என உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்துக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனுவை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அஜய்ரோஸ்கி, சிடி ரவிக்குமார் அடங்கிய அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்கிறது.