சென்னை, புரசைவாக்கத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அமைப்பு அலுவலகத்தை, அதன் காவல் நிலையமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து தமிழக உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் தமிழகத்தில் நடைபெறும் பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளை தேசிய புலனாய்வு அமைப்பின் சென்னைக் கிளை வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்படப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே டெல்லி தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருக்கக்கூடிய தமிழக வழக்குகளை சென்னைக் கிளை பெற்று விசாரணை நடத்த இருப்பதாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.