தென்னிந்திய நடிகர் சங்க தலைவரும், மூத்த நடிகருமான நாசர் தன்னுடைய திரைப்பயணத்தை உடல்நல குறைவு காரணமாக நிறுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவலை மறுத்துள்ள நடிகர் நாசர், ”வதந்திகளை நம்ப வேண்டாம், என் இறுதி மூச்சு உள்ள வரை நடிப்பேன்” என்று கூறியுள்ளார். மேலும், இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நாசரின் மனைவி கமீலா, ”நாசர் சினிமாவை தான் சுவாசிக்கிறார். அதுதான் அவரின் உணவு, அவரின் உடல் நிலை குறித்து அக்கறை காட்டிய அனைவருக்கும் நன்றி. தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.