புதுடெல்லி: சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஜனவரி 23-ம் தேதி பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் பராக்ரம் திவாஸ் தினத்தையொட்டி, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் பெயர் சூட்டப்படாத 21 தீவுகளுக்கு, பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை பிரதமர் மோடி சூட்டுகிறார். 21 தீவுகளில், அளவில் மிகப் பெரிய தீவுக்கு முதல் பரம்வீர் சக்ரா விருதைப் பெற்றவரின் பெயர் வைக்கப்படும் என்றும், அடுத்தடுத்த அளவுள்ள தீவுகளுக்கு அடுத்தடுத்து பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்கள் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.