நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு விருதுகளை வழங்கினார். அதில், தகைசால் தமிழா் விருது நல்லகண்ணுக்கு முதலமைச்சர் வழங்கினார். அப்போது, ரூ.10 லட்சத்துக்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து, தனக்கு வழக்கப்பட்ட காசோலையுடன், ரூ.5 ஆயிரம் பணத்தையும் சேர்த்து விழா மேடையிலேயே முதலமைச்சர் பொது நிவாரணநிதிக்கு மு.க.ஸ்டாலினிடம் நல்லகண்ணு வழங்கினார். அவரைத் தொடர்ந்து, ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல் ஆளுமை விருதுகள், மாநில இளைஞா்கள் விருதுகள், மாற்றுத்திறனாளி நலனுக்காக அரும்பணியாற்றியவா்களுக்கான விருது, சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான விருதுகளையும் முதலமைச்சர் வழங்கினார்.