அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த 29ஆம் தேதி தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4ஆவது சுற்றில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடாலும் அமெரிக்காவின் பிரான்சஸ் டியாஃபோவும் மோதினார்கள். 6-4, 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் நடாலை வீழ்த்தி முதல்முறையாக யு.எஸ். ஓபன் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளார். இந்த ஓபன் டென்னிஸ் தொடரில் தான் காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய போட்டிகளிலேயே டென்னிஸ் விளையாட்டின் முன்னணி வீரர்களான நடால், ஃபெடரர், ஜோகோவிச், மெத்வதேவ் போன்றவர்கள் வெளியேறியுள்ளனர்.