இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “நானே வருவேன்”. இந்த திரைப்படத்தில், வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை எல்லி அவ்ராமும் தமிழில் அறிமுகமாகிறார். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ற படங்களில் இணைந்து உருவாக்கிய சகோதரர்களான செல்வராகன், தனுஷ் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்து உருவாக்கி இருக்கும் திரைப்படம் நானே வருவேன் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருக்கின்றனர். இந்த நிலையில், இந்த படத்தைப் பற்றிய முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6:20 மணி அளவில் வெளியாகும் எனப் படத்தின் தயாரிப்பாளர் தாணு கூறியுள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.