இயக்குநர் சுராஜின் தலைநகரம் திரைப்படத்தில் சுந்தர்.சி உடன் இணைந்து வடிவேலு நாய் சேகர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த பெயர் பெரிய அளவில் ரீச் ஆனதால் அனேக மீம் டெம்லெட்டாக தற்போது வரை வலம் வருகிறது. இதையடுத்து, நாய் சேகர் என்ற பெயரில் முன்னரே சதிஷ் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளதால், தற்போது தலைநகரம் படத்தில் வடிவேலுவின் கதாப்பாத்திரமான நாய் சேகர் கதாப்பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய படம் ஒன்று உருவாகிவருகிறது. ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு நடித்து வருகிறார். மேலும், இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, பிக்பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த நிலையில் ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் திரைக்கு வரும் என்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஓடிடி உரிமையைப் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.