தென் அமெரிக்க நாடான சிலியில் உள்ள போசோ அல்மோண்டே பகுதியின் மேகங்கள் திடீரென ஊதா நிறத்தில் மாறின. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் வாசிகள் ஊதா மேகக் கூட்டத்தின் படங்களை இணையத்தில் பதிவேற்றினர். இதையடுத்து, தகவலறிந்த அந்த நாட்டு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், நகருக்கு அருகே உள்ள சுரங்கத்தில் பூஸ்டர் பம்ப் செயலிழப்பால் ஆலையில் திட வடிவில் இருந்த அயோடின் வாயு நிலைக்கு மாறியதால் அது காற்றில் கலந்து மேகங்களை ஊதா நிறத்தில் மாற்றியதாகவும் 48 மணி நேரம் வரை நீடித்திருந்த ஊதா மேகம் பின்னர் மறைந்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.