day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

கூட்டணி கட்சிகளை மிரட்டும் தொனியில் அறிக்கை வெளியிடுகிறதா முரசொலி

கூட்டணி கட்சிகளை மிரட்டும் தொனியில் அறிக்கை வெளியிடுகிறதா முரசொலி

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்தநிலையில், அவரின் அறிக்கைக்குறித்து இன்று திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், “திமுக கட்சிக்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்குமிடையே ‘சிண்டு முடிந்து’, இந்த வலிமை மிகு கூட்டணியை முறித்துவிட சந்தர்ப்பம் கிடைக்காதா என நாக்கைத் தொங்கவிட்டு காத்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம் என்பதை தோழர் பாலகிருஷ்ணன் அறியாதவர் அல்ல. பேனைப் பெருமாளாக்கி அதனை பெத்த பெருமாளாக்கிடு வதில் வல்லமை வாய்ந்த கூட்டம் அது. வெறும் வாயை மென்று சுவைத்து ஜீரணித்து சுகம் காணும் அந்த வஞ்சகக் கூட்டத்தின் வாய்க்கு அவல் கிடைத்தால் என்னவாகும்? ஆகையால் நாம் விடும் அறிக்கைகள் எதிரிகள் வாய்க்கு அவலாகி விடாது எச்சரிக்கையாகச் செயல்படுவோம்” என தமிழக எதிர்க்கட்சிகளையும், தேசிய எதிர்க்கட்சிகளையும் குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ளது.

மேலும், “இப்போது மட்டுமல்ல; இதற்கு முன் ஐந்தாண்டு காலமாகவும் தோழர் பாலகிருஷ்ணனின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான ஆட்சி தான் கேரளத்தில் நடைபெற்று வருகிறது என்றும், வேறு வழியற்ற நிலையில்தான் மின் கட்டண உயர்வை அறிவித்திருக்கும் என்பது நமக்கும் தெரியும்; தோழர் பாலகிஷ்ணனுக்கும் தெரிந்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம், கூட்டணி கட்சிகளை மிரட்டும் தொனியில் அறிக்கை வெளியிடுகிறதா முரசொலி? என்று எதிர்க்கட்சிகள் குரலெழுப்பி வருகின்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பொருத்தவரை கடந்த சில தினங்களுக்கு முன் பரந்தூர் விமான நிலைய விவகாரம் தொடர்பாக தமிழக அரசே வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டிருந்தார். தற்போது, மின்கட்டண உயர்வு குறித்தும் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அரசின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பும் கூட்டணிக்கட்சிகளின் குரல் வலை நெறிக்கப்படுகிறதா என்று கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு பேச்சி வார்த்தையின்போது, தொழிளாலர்களுக்காக, திமுக கூட்டணியில் உள்ள தொழிற்சங்கங்கள் கூட செயல்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் நடைபெறும் மக்கள் பிரச்சனைகள் குறித்து அறிக்கை வெளியிடும் பாலகிருஷ்ணனுக்கு “நாம் விடும் அறிக்கை பூமராங் போல பல நேரங்களில் நம்மை நோக்கித் திரும்பி விடக் கூடாது” என்று எச்சரிக்கும் முரொசொலின் கட்டுரை, திமுக கூட்டணிக்கட்சிகளின் சுதந்திரம் நசுக்கப்படுவதையே எடுத்துக்காட்டுகிறது. தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் மட்டுமே ஆளும் திமுகவின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்து வந்த நிலையில், கூட்டணி கட்சிகளாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிடத்தொடங்கி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதே முரசொலி பதரடித்துக்கொண்டு பதில் கட்டுரை வெளியிட்டு இருப்பதற்கு காரணம் என்றும் அரசியல் வட்டாரங்களில் சொல்லப்பட்டு வருகிறது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!