மும்பை பங்குச்சந்தை அக்டோபர் மாதத்தின் கடைசி நாளும், வாரத்தின் முதல் நாளுமான இன்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. அதன்படி, கடந்த வாரம் பங்குச்சந்தை முடிவு நாளான வெள்ளிக்கிழமை 59,959.85 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற நிலையில் இன்று சென்செக்ஸ் 60,000 புள்ளிகளைக் கடந்துள்ளது. இன்று காலை 60,246.96 புள்ளிகளில் தொடங்கி பிற்பகல் 1.35 மணிக்கு 659.21 புள்ளிகள் அதிகரித்து 60,619.06 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 181.70 புள்ளிகள் உயர்ந்து 17,968.50 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது