சர்வதேச பங்குச்சந்தையையொட்டி இந்தியாவில் பங்குச்சந்தை வர்த்தகம் கடந்த சில நாட்களாக இறக்கு முகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமையான இன்று மும்பை பங்குச்சந்தையில் ஏற்றத்துடன் வர்த்தகம் தொடங்கி நடந்து வருகிறது. அதில், சென்செக்ஸ் குறியீட்டு எண் 644 புள்ளிகள் அதிகரித்து 59,055ஆகவும், நிப்டி குறியீட்டு எண் 188 புள்ளிகள் அதிகரித்து 17,500 ஆகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.