ஹைதாராபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில், ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. 16 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்திருந்த அவரை சாவ்லா வீழ்த்த, ஓப்பனிங் இறங்கி நிலைத்திருந்த மயங்க் அகர்வாலை 48 ரன்களில் இம்பேக்ட் பிளேயராக வந்த ரிலே மெரிடித் அவுட் ஆக்கினார். இதன்பின் வந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் பெரிதாக யாரும் ரன் சோர்க்கவில்லை.இந்நிலையில்,சன்ரைசர்ஸ் அணி 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன், ரோஹித் ஷர்மா களமிறங்கினர். இறுதியில், 20 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களைச் சேர்த்தது. இதனால்,மும்பை இந்தியன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.