பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்துகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் இளஞ்சிவப்பு வண்ணம் பூசப்பட்ட 50 பேருந்துகளின் சேவையை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இதையடுத்து, சென்னையில் இயக்கப்படும் 1559 சாதாரண கட்டண பேருந்துகளுக்கும் முன் மற்றும் பின் பக்கங்களில் இளஞ்சிவப்பு வண்ணம் பூசப்பட உள்ளது. சென்னையில் மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் நாள்தோறும் 602 வழித்தடங்களில் 3100 பேருந்துகள் வரை இயக்கப்படும் நிலையில், மீதமுள்ள சாதாரண கட்டண பேருந்துகளுக்கும் விரைவில் இளம் சிவப்பு வண்ணம் பூசப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.