ஐபிஎல் சூதாட்டம் குறித்து கடந்த 2013ஆம் ஆண்டு விசாரணை நடத்திய சம்பத்குமார், அப்போதைய சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் இவ்விவகாரத்தில் ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.