ரபாத்: சீனாவில் தற்போது கொரோனா தொற்று பரவல் திடீரென வேகமாக பரவி வருகிறது. இதன் எதிரொலியாக இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்பட ஒரு டஜனுக்கும் அதிகமான நாடுகள் சீனாவில் இருந்து பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
இதுதொடர்பாக, மொராக்கோ வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சீனாவில் கொரோனா தொற்று தொடர்பான சுகாதார நிலைமை மோசமடைந்துள்ளது. இந்த சூழலில் மொராக்கோவில் ஒரு புதிய கொரோனா அலை மற்றும் அதன் அனைத்து விளைவுகளையும் தவிர்ப்பதற்காக சீனாவில் இருந்து வரும் அனைத்துப் பயணிகளும், மொராக்கோ எல்லைக்குள் நுழைவதை தடைசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை இரு நாட்டு மக்களுக்கு இடையேயான நேர்மையான நட்பையோ அல்லது இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டாண்மையையோ பாதிக்காது என்று தெரிவித்துள்ளது.