ஆஸ்திரேலியா நாட்டின் டாஸ்மேனியா தீவில் உள்ள மேக்வாரி துறைமுகத்துக்கு அருகே உள்ள கடற்கரையில் நேற்று 230க்கும் அதிகமான திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், பல திமிங்கலங்கள் உயிருடன் இருக்கலாம் என்று எண்ணப்படுவதால் அவற்றை மீட்டு மீண்டும் கடலுக்குள் விடும் முயற்சியில் அதிகாரிகளுடன் தன்னார்வலர்களும் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, கடந்த 2020ஆம் ஆண்டு இதே பகுதியில் கரை ஒதுங்கிய 500க்கும் அதிகமான திமிங்கலங்களில் சுமார் 100 திமிங்கலங்கள் மட்டுமே உயிர் பிழைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.