மாணவியர்களின் உயர்கல்விக்கான ஊக்கத்தொகை வழங்கப்படும் என நடந்த முடிந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கல்லூரிகள் திறந்தவுடன் மாணவிகளுக்கு ரூ.1,000 கல்வி ஊக்கத்தொகை வழங்க ஏற்பாடுகள் தயாராக உள்ள நிலையில் உள்ளதாகவும், இந்த ஆண்டே திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சசர் கீதா ஜீவன் கூறியுள்ளார். இந்த ஊக்கத்தொகை மாணவியர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இன்று நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 விரைவில் கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.