அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தில் கனமழை காரணமாக அங்கு வெள்ளம் தேங்கி உள்ளது. மேலும் மழையால் இதுவரை 4 குழந்தைகள் உட்பட 35 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசிய பாதுகாப்புப் படையினர் ஹெலிகாப்டர்கள் மூலம் வெள்ள நிவாரணங்களை வழங்கினர். இதைத்தொடர்ந்து அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்தில் குரங்கு அம்மை நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குரங்கு அம்மை நோய்க்கு எதிரான நடவடிக்கைகளை அனைத்து அரசுத் துறைகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்கு வசதியாகவும், தடுப்பூசிகளை கூடுதலாக பெறுவது, அந்த நோய் குறித்த விழிப்புணா்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளுக்கு இந்த அவசரநிலை அறிவிப்பு உதவும் என எதிர்ப்பார்த்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக அமெரிக்காவின் ஃபிரான்சிஸ்கோ மற்றும் நியூயாா்க் மாகாணத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது.