வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா நான்கு நாள் பயணமாக இந்திய தலைநகர் டெல்லிக்கு நேற்று வந்தார். முன்னதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசிய ஹசீனா தற்போது பிரதமர் மோடியை ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, இருநாட்டுக்கு இடையேயான வர்த்தகம், நதிநீர் பங்கீடு உட்பட பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் ஆகியோரையும் ஷேக் ஹசீனா சந்திக்கவுள்ளாா் என்று தகவல் வெளியாகியுள்ளது.