சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.. அதிகபட்சமாக 32-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்பநிலை நிலவகூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.