தமிழக அரசின் சிறப்புத்திட்டச் செயலாக்கத்துறை சார்பில், சென்னையில் உள்ள அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 30 இளம் வல்லுநர்களுக்கு 30 நாட்கள் வகுப்பறை பயிற்சியுடன் கூடிய இரண்டாண்டு புத்தாய்வுத் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்டுள்ள 30 இளம் வல்லுநர்களுக்கு மடிக்கணினி வழங்கி புத்தாய்வு திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, ரகுபதி, பெரியகருப்பன், பழனிவேல் தியாகராஜன், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்