தமிழக நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். இதன் ஒரு அங்கமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு ஆணைகளை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார். அப்போது, செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர், கவுண்டம்பாளையம் மேம்பாலம் திறப்பு குறித்த கேள்விக்கு, பாஜகவினர், அவர்களே பாலத்தை திறந்தால் அவர்கள் மீது வழக்கப்பதிவு செய்யப்படும் என்றும், சட்டத்தை கையில் எடுப்பதற்கும், ஆட்சி அதிகாரத்தை கையில் எடுப்பதற்கும் யாருக்கும் அதிகாரம் இல்லை. குண்டர்கள், வன்முறையாளர்கள், முரடர்கள் போன்றவர்கள் கலந்திருந்தார்கள் என்றால், அரசு வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்காது என்று அவர் எச்சரித்துள்ளார். முன்னதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆதினங்கள் குறித்து பேசியது சர்ச்சையான நிலையில், தற்போது மீண்டும் மின்சாரத்துறை அமைச்சர் பாஜக கட்சினரை மிரட்டும் விதமாக எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.