அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தின் சண்டியாகோ என்ற புறநகர் பகுதியில் இருக்கும் ரயில் தண்டவாளத்துக்கு அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் 18 சக்கர கண்டெய்னர் லாரி ஒன்று நின்றுகொண்டு இருந்துள்ளது. இந்த கண்டெய்னர் லாரியை காவல்துறையினர் சோதனையிட்டப்போது அதில் இருந்து 46க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இத்துடன் உயிருக்கு போராடிய 16 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேற அகதிகளாக லாரியில் வந்திருக்கலாம் என்றும் 100க்கும் மேற்பட்டவர்கள் இருந்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்றும் காவல்துறையுனரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.