தமிழகத்தை சேர்ந்த எம்.ஜி.எம். குழுமம் சென்னை, பெங்களூரு போன்ற முன்னணி நகரங்களில் ஏற்றுமதி இறக்குமதி, மதுபான தயாரிப்பு, மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகள், வெளிநாட்டு வர்த்தகம், பொழுதுப்போக்கு பூங்கா உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி முதல் 4 நாட்கள் தமிழகம், பெங்களூரு உட்பட எம்.ஜி.எம். குழுமத்துக்குச் சொந்தமான 40 இடங்களில் 300க்கும் அதிகமான வருமான வரித்துறை அதிகாரிகள் வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக தமிழகத்தில் சென்னை, நெல்லை, செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியிடுள்ள அறிக்கையில், எம்ஜிஎம் குழுமத்தில் ரூ.400 கோடி ஏரி ஏய்ப்பு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், சோதனையில், ரூ.3 கோடி பணம் மற்றும் ரூ.2.5 கோடி மதிப்புள்ள தங்கம் கைப்பற்றப்பற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.