மேட்டூர்: காவிரி நீபிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவை பொறுத்து ஒக்கேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான அதிகரிப்பதும், குறைவதுகாக இருந்து வருகிறது. இதனால் ஒக்கேனக்கல் ,காவேரியின் நீர் வரத்து 3-வது நாளாக நேற்று 9500 கனாடியை எட்டியுள்ளது.
இந்நிலையில்,காவிரி டெல்டா பாசன பகுதியில் மழை பெய்து வருவதால், நேற்று மாலை முதல் நீர்திறப்பு 2 ஆயிரம் கனஅடியில் இருந்து 1000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால், நீர்மட்டம் உயரத்தொடங்கியுள்ளது. நேற்று 119.05 அடியாக நீர்மட்டம் சற்று உயர்ந்து இன்று காலை 119.32 அடியாக உயர்ந்தது. இந்த ஆண்டில் மட்டும் மேட்டூர் அணை 3 – வது முறையாக நிரம்ப வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை தகவல் தெரிவித்துள்ளது.