காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக லேசான மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 19,500 கன அடியிலிருந்து 23,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 19,000 கன அடியிலிருந்து 22,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது. மழையளவு 22.20 மி.மீ. பதிவாகியுள்ளது.