புதுடெல்லி: டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய அரங்கத்தில் இன்று காலை 10.30 மணியளவில் ஆதி மகோத்சவம் என்ற பெயரிலான மெகா தேசிய பழங்குடியின திருவிழாவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.
இந்நிகழ்ச்சியில் பழங்குடி கலாசாரம், கைவினை பொருட்கள், உணவு பொருட்கள், வர்த்தகம் மற்றும் பாரம்பரிய கலை மற்றும், சர்வதேச சிறுதானியங்களுக்கான ஆண்டாக 2023-ம் ஆண்டு கொண்டாடப்படும் சூழலில் பழங்குடியினரால் வளர்த்தெடுக்கப்பட்ட ஸ்ரீ அன்னா சிறுதானியமும் இதில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. நிகழ்ச்சியில் 200 ஸ்டால்கள் அமைக்கப்படும்.
இந்நிகழ்ச்சி மத்திய பழங்குடியின விவகாரங்களுக்கான அமைச்சகம் சார்பில் இன்று தொடங்கி பிப்ரவரி 27-ந்தேதி வரை நடத்தப்படுகிறது. இந்த மகோத்சவத்தில் ஆயிரக்கணக்கான பழங்குடியின கலைஞர்கள் பங்கேற்கௌள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.