சென்னை: தமிழக அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் கூறியிருப்பதாவது:- அரசு வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்கள் கண்பரிசோதனை, காது பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். 50 வயதுக்கு குறைவான ஓட்டுநர்கள் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 50 வயதுக்கு அதிகமான ஓட்டுநர்கள் ஆண்டுக்கு ஒருமுறையும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.