தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான கௌதம் கார்த்திக், ‘தேவராட்டம்’ என்ற படத்தில் நடித்தபோது அவருடன் நடித்த நடிகை மஞ்சிமா மோகனுடன் காதல் ஏற்பட்டது.
நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகனின் காதல் திருமணம் இன்று இருதரப்பு பெற்றோர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இத்திருமணத்தில் தம்பதியின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையெடுத்து மணக்கோலத்தில் இருவரும் இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. கௌதம் கார்த்திக் – மஞ்சிமா தம்பதிகளுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் , ரசிகர்களும், தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.