சென்னை: மாண்டஸ் புயல் நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு கூறுகையில்: மெரினா கடற்கரை பகுதியில் கான்க்ரீட் அமைப்புகளுக்கோ, இரும்புப் பொருட்களைப் பயன்படுத்தி கட்டமைப்புகளை உருவாக்கவோ அனுமதி இல்லை என்ற காரணத்தினால் மரப்பாதை அமைக்கப்பட்டது. எதிர்பாரத விதமாக இயற்க்கை சீற்றதினால் “சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்புப் பாதை சேதமடைந்துள்ளது. எதிர்காலத்தில் இன்னும் வலுவான பாதையை அமைக்க நிபுணர் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது இயற்கை சீற்றத்தினால் சேதமடைந்த பாதை இன்னும் 2, 3 தினங்களில் சீரமைக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகள் மீண்டும் கடலையும், கடற்கரையையும் ரசிக்க முதல்வர் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார்.
நிவாரண முகாம்கள் பற்றி அவர் கூறுகையில், “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 41 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தியிருந்தோம். ஆனால், வட சென்னையில் 2 முகாம்களில் குறைந்த அளவிலேயே மக்கள் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.