ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் தனது 61ஆவது திரைப்படமான துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரகனி போன்ற நடிகர்களும் இணைந்துள்ளனர். 1987ஆம் ஆண்டு பஞ்சாப்பில் நடந்த வங்கி கொள்ளை உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று தற்போது முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், படம் பொங்கல் பண்டிகையின் போது வரும் ஜனவரியில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. அதில், மஞ்சு வாரியர் துணிவு படத்துக்கு டப்பிங் பேசும் போது எதிரே ஓடிய படக்காட்சியின் புகைப்படத்தை பகிர்ந்து ‘No Guts No Glory’ என்று குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில், அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையின்போது ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளதால் இரண்டு ஹீரோக்களின் ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.