கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தில் அறிமுகமானார் மஞ்சிமா மோகன். இவர் சமீக காலமாக திரைத்துறையைச் சேர்ந்த ஒருவரை காதலித்து வருவதாக செய்திகள் உலா வந்தன. இந்த நிலையில், தற்போது சமூக வலைதளத்தில் நடிகர் கெளதம் கார்த்திக்கை காதலிப்பதாக தனது பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு தெரிவித்துள்ளார். அதேபோல், கெளதம் கார்த்திக்கும் தனது சமூக வலைதள பக்கத்தில் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு தெரியப்படுத்தியுள்ளார். கௌதம் கார்த்திக்குடன் இணைந்து தேவராட்டம் படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் நடிக்கும்போது இருவரும் காதலித்ததாக அப்போதே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.