மணிப்பூர் கலவர சம்பவத்தை கண்டித்து மதுரை அருகே யானைமலையின் மீது ஏறி பாத்திரம் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கலவரத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் ஒத்தக்கடை எவர்சில்வர் பாத்திரங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் யானைமலை அடிவார பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சங்கத் தலைவர் வீர அலி தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மக்கள் அதிகாரம் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.