மலையாள நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான ஆக்சன் ஹீரோ பிஜு என்ற சூப்பர்ஹிட் திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் என்.டி. பிரசாத் (43). இவர், கொச்சி அருகே கலமசேரி பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு வெளியே இருக்கும் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். பிரசாத்துக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மனஉளைச்சல் மற்றும் குடும்ப சூழ்நிலை காரணங்களால் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக வழக்கை விசாரித்த காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. முன்னதாக பிரசாத், கஞ்சா உள்ளிட்ட பிறவகை போதைப் பொருட்கள் மற்றும் கொடிய ஆயுதங்கள் வைத்ததற்காக கைது செய்யப்பட்டு இருந்தார்.