சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி நேற்று மாலையுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து, இவரின் இடத்துக்கு வேறு நீதிபதி நியமனம் செய்யப்படாததால், மூத்த நீதிபதி எம்.துரைசாமி சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக நியக்கப்படவுள்ளார். அதன்படி, இன்று காலை சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக எம்.துரைசாமி பதவியேற்க உள்ளார். இவர் வருகிற செப்டம்பர் 21ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளார். எம்.துரைசாமி நியமனம் செய்வதற்கான நீதிபதிகள் பரிந்துரையை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டு கடந்த சில தினங்களுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.