வரும் நவம்பர் 8ஆம் தேதி இந்திய நேரப்படி பிற்பகல் 2.48 மணிக்கு தொடங்கி 6.19 மணிக்கு முடிவடையும் முழு சந்திர கிரகணம் நடக்கவுள்ளது. இதனை, மனிதர்கள் தொலைநோக்கி இல்லாமல் வெறும் கண்களால் பார்க்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சந்திர கிரகணத்தை வடக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் பெரும்பலான பகுதிகள், ஆஸ்திரேலியா, அண்டார்டிகா போன்ற பகுதிகளிலும், பசிபிக், அட்லாண்டிக், இந்திய மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களின் சில பகுதிகளிலும் காண முடியும். அடுத்த முழு சந்திர கிரகணம் 2023ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.