சென்னை : சென்னையை சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் கண் சொட்டு மருந்துகளில் உயிரிழப்பு ஏற்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதால், தமிழக மருந்து கட்டுப்பாட்டாளர் மற்றும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணைய உறுப்பினர்கள், குளோபல் பார்மா ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் நள்ளிரவு ஆய்வு மேற்கொண்டனர். கண் சொட்டு மருந்துகளில் எதிர்ப்பு பாக்டீரியாவால் மாசுபட்டு உள்ளது என அமெரிக்காவின் நாட்டின் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் கூறியதை அடுத்து அமெரிக்க சந்தையில் இருந்து செயற்கை கண்ணீர் மசகு எண்ணெய் கண் சொட்டு மருந்துகளை தானாக முன்வந்து திரும்பப் பெற்றது.
இந்த கண் சொட்டு மருந்தால் நிரந்தர பார்வை இழப்பு மற்றும் இரத்த ஓட்டத்தில் ஏற்படும் தொற்றுநோயால் மரணம் ஏற்படும் என கூறி உள்ளது. நுரையீரல் அல்லது காயங்களில் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தலாம் மற்றும் ஆன்டிபயாடிக் எதிர்ப்பின் காரணமாக கிருமி சமீப காலங்களில் சிகிச்சையளிப்பது கடினமாக உள்ளது என்று இன்சைடர் இணையதளம் தெரிவித்துள்ளது. இதுவரை, கண்களில் நோய்த்தொற்று ஏற்பட்ட 11 நோயாளிகளில் ஐந்து பேர் பார்வையை இழந்துள்ளனர் என்று சிடிசி செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.