சிவில் சர்வீஸ் போன்ற முக்கியமான தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், படிப்புக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்று சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருப்பதை பார்த்து இருக்கிறோம். அதேபோல, விக்ரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜும் தனது எழுத்து பணிக்காக சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நான் அனைத்து சமூக ஊடக தளங்களில் இருந்து சிறிது பிரேக் எடுத்துக்கொள்ள நினைக்கிறேன். எனது அடுத்த படத்தின் அறிவிப்புடன் நான் விரைவில் திரும்பி வருவேன். அதுவரை அனைவரையும் பார்த்துக்கொள்ளுங்கள்” என குறிப்பிட்டுள்ளார். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய நான்கு படங்களை எழுதி, இயக்கியுள்ள லோகேஷ் நடிகர் விஜய்-க்கு தற்போது ஒரு கதையை உருவாக்கி வருகிறார். தளபதி 67 என்று அழைக்கப்படும் இந்த பெயரிடப்படாத இந்த படத்துக்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே மாஸ்டார் படத்தில் இணைந்து வேலை செய்த இவர்கள் தற்போது மீண்டும் அடுத்த கதைக்கு தயாராகி வருகின்றனர். விக்ரம் படம் மூலம் இந்திய அளவில் லோகேஷ் கனகராஜ் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு வைக்கப்பட்டுள்ளதால் அதை ஈடுசெய்ய அவர் தற்போது சமூக வலைதளங்களில் இருந்து கூட விலகி இருந்து தீவிரமாக தளபதி 67 என்று அழைக்கப்படும் கேங்க்ஸ்டர் கதைக்கள படத்தின் ஸ்கிரிப்ட்க்கு வெயிட் ஏத்தவுள்ளார். அக்டோபர் மாதம் ‘விஜய் 61’ படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.