தமிழக ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 510 பதவிகளுக்கு இன்று (ஜூலை 9ஆம் தேதி) இடைத்தேர்தல் காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், 498 ஊரக உள்ளாட்சி பதவிகளும், 12 நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளும் அடங்கும். இன்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவுறும். இன்று பதிவிடப்படும் வாக்குகள் ஜூலை மாதம் 12ஆம் தேதி எண்ணப்படவுள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில், 510 பதவிகளில் 34 பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறுவதால் அதிமுக உட்கட்சி விவகாரம் காரணமாக சுயேட்சை சின்னத்தில் போட்டியிட விருப்பமின்றி அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது.