day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

உணவு பதப்படுத்தும் தொழில் தொடங்குவோருக்கு மானியத்துடன் கடனுதவி – கலெக்டர் ராகுல்நாத் தகவல்

உணவு பதப்படுத்தும் தொழில் தொடங்குவோருக்கு மானியத்துடன் கடனுதவி – கலெக்டர் ராகுல்நாத் தகவல்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் கூறுகையில் :தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் மானியத்துடன் கூடிய சுயதொழில் கடனுதவி திட்டங்களுள் ஒன்று, மத்திய, அரசின் 60 சதவீத நிதிப்பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டம் ஆகும். ரூ.1 கோடி வரையிலான திட்டத்தொகை கொண்ட உணவு பதப்படுத்தும் தொழில் திட்டங்கள் இத்திட்டத்தின் கீழ் உதவி பெற தகுதி பெற்றவை. திட்டத்தொகையில் 10 சதவீதம் முதலீட்டாளர் தம் பங்காக செலுத்த வேண்டும். 90 சதவீதம் வங்கிகளால் பிணையமில்லா கடனாக வழங்கப்படும். அரசு 35 சதவீதம் மானியம், அதிக பட்சம் ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும். சுய உதவி குழுவினர் உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.40 ஆயிரம் வீதம் தொடக்க நிலை மூலதனமாக வழங்கப்படும். உணவுப்பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு தேவையான பொது கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொது வசதியாக்க மையங்களை ஏற்படுத்தவும் திட்ட தொகையில் 35 சதவீதம் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன் பெற pmfme.mofpi.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.

இந்த திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்துதல் வகைப்பாட்டின் கீழ் அடங்கும் பழச்சாறு, பழக்கூழ் தயாரித்தல், ஊறுகாய், வற்றல், அரிசி ஆலை, உலர் மாவு மற்றும் ஈர மாவு தயாரித்தல், உணவு எண்ணெய் பிழிதல், மரச்செக்கு எண்ணெய், பேக்கரி பொருட்கள், தின்பண்டங்கள் தயாரித்தல், மசாலா பொடிகள் தயாரித்தல், பால் பொருட்கள் தயாரித்தல், இறைச்சி மற்றும் மீன் வகைகள் பதப்படுத்தல் போன்ற தொழில்களை தொடங்கவும் ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் குறுந்தொழில் நிறுவனங்களை விரிவாக்கம் மற்றும் தொழில் நுட்ப மேம்படுத்தல் செய்யவும் பயன் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ளோர், ஏற்கனவே உணவுபதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் குறு நிறுவனங்கள், சுய உதவி குழுவினர், உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர், உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் ஆகியோர் பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!