தனியார் அமைப்பு நடத்திய கணிப்பில் இந்தியாவின் பணக்கார பெண்கள் பட்டியலில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ஹெச்.சி.எல். தலைவர் ரோஷினி நாடார் மல்கோத்ரா முதலிடத்தில் நீடிக்கிறார். ரோஷினியின் சொத்து மதிப்பு ரூ.84 ஆயிரத்து 330 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. இவரைத்தொடர்ந்து, இ-காமர்ஸ் நிறுவனமான நைக்காவின் சி.இ.ஒ. பல்குனி நாயர் ரூ.57 ஆயிரத்து 520 கோடி சொத்துடன் 2வது இடத்திலும், Biocon நிறுவனர் கிரண் மஜூம்தர் ஷா 3-வது இடத்திலும் நீடிக்கிறார்.