மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் இலக்கிய பணிகளை போற்றும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரின் நினைவிடத்திற்கு பின்னால் உள்ள கடல் பகுதியில் பேனா வடிவு நினைவுச்சின்னம் ரூ.81 கோடி மதிப்பில் அமையவுள்ளது. இந்த திட்டத்துக்கான தக்க ஆய்வை மேற்கொள்ள மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சகத்தின் அனுமதியை கோரி தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.