அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா மாகாணம் கூப்பர்டினோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் ஐபோன் புதிய மாடல் செல்பேசிகளை அறிமுகம் செய்தார். அதில் ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்கள் அடங்கும். இவை, ப்யோனிக் சிப் ப்ராசசர், வாட்டர் ரெஸிஸ்டண்ட் மற்றும் ப்ரூஃப், அதிநவீன கேமரா, அட்வான்ஸ் டிஸ்பிளே, விபத்து அறிவிப்பு, எமெர்ஜென்ஸி எஸ்ஓஎஸ், நீண்ட காலம் நீடிக்கும் பேட்டரி, சேமிப்பு வசதி ஆகியவை முன்பைவிட கூடுதலாக இந்த மாடல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வரும் 16ஆம் தேதி முதல் ஐபோன் 14 மாடல் விற்பனைக்கு வருகிறது. ஐபோன் 14 மாடல்களின் ஆரம்பவிலை ரூ.79,900யாகவும், ஐபோன் 14 புரோ மேக்ஸ் விலை அதிகபட்சம் ரூ.1,39,900 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ச் சீரிஸ் 8 விளையாட்டு, உடற்பயிற்சி, ஆராய்ச்சி, வெளியுலக தொடர்பு போன்றவற்றுக்கு பயனுள்ளதாக இருக்கும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.