சென்னையில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஆறு முதல் 7 பேர் வரை ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு வர தயாராக உள்ளதாக கூறியுள்ளார். இந்த அணி மாறுதலுக்கு தலைமை தாங்குவதே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தான் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், அதிமுக தலைமை அலுவலகத்தின் முன்பு ஏற்பட்ட கலவரத்திற்கு சிபிஐ விசாரணை கேட்கும் ஜெயக்குமார், நெடுஞ்சாலைத்துறை விவகாரத்தில் நடைபெற்று வரும் வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டாம் என்று கூறுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார். எடப்பாடி தரப்பினர் எங்கு சென்றாலும் எங்களை துரோகம் இழைத்து விட்டதாக குற்றம் சுமத்தி வருகின்றனர். ஆனால் உண்மையில் துரோகம் செய்தவர்கள் அவர்கள் தான், இபிஎஸ் அணியில் இருந்து யார் வந்தாலும் சேர்த்துக்கொள்வோம் ஆனால் ஜெயக்குமார் வந்தால் சேர்த்துக்கொள்ளமாட்டோம் எனக் கூறியுள்ளார்.